ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் - மகளிர் கபடி அணி சாதனை

புஷ்பா ராணா தலைமையிலான இந்திய மகளிர் கபடி அணி, தொடக்க ஆட்டத்தில் வங்கதேசம், ஜப்பான் ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம் - மகளிர் கபடி அணி சாதனை
Published on: 
Summary

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கபடி போட்டியில், இந்திய மகளிர் அணி ஈரானை 37-34 என்ற புள்ளிகளில் தோற்கடித்து தங்கத்தை வென்றுள்ளது.

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரில் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

அரையிறுதி போட்டி

புஷ்பா ராணா தலைமையிலான இந்திய மகளிர் கபடி அணி, தொடக்க ஆட்டத்தில் வங்கதேசத்தை 42-21 என்ற புள்ளிக்கணக்கிலும், 2-வது போட்டியில் ஈரானை 37-23 என்ற புள்ளிக்கணக்கிலும், 3வது போட்டியில் ஜப்பானை 50-25 என்ற புள்ளிக்கணக்கிலும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன.

முதல் பாதி

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஈரான் அணியை எதிர்த்து இந்தியா களம் கண்டது. அப்போது முதல் பாதியில் இந்திய அணி 22-16 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து விறுவிறுப்பாக நடந்த இரண்டாம் பாதியில் இந்திய வீராங்கனையான சஞ்சு தேவி இரண்டு முக்கிய புள்ளிகளை எடுத்தார்.

இதைத்தொடர்ந்து கேப்டன் புஷ்பா ராணா, பூஜா ஆகியோர் ஆட்டத்தின் தேவையான கட்டத்தில் முக்கியமான புள்ளிகளை எடுத்து, இந்திய அணியை 34-28 என்ற புள்ளியில் முன்னிலைப் படுத்தினர்.

ஆட்டத்தின் கடைசி நிமிடம்

இதையடுத்து ஆட்டத்தின் இறுதியில் இந்திய மகளிர் கபடி அணி, 37-34 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி, மூன்றாவது தங்கப்பதக்கத்தை பெற்றது.

தரவரிசைப் பட்டியல்

இதன்மூலம் இந்திய அணி 3 தங்கம், 11 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் பெற்று, மொத்தம் 27 பதக்கங்களுடன் தரவரிசையில் 12வது இடத்தில் உள்ளது.

சீன அணி 103 தங்கம், 38 வெள்ளி மற்றும் 25 வெண்கலம் பெற்று, மொத்தம் 166 பதக்கங்களுடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com