ஆசிய விளையாட்டில் இந்தியா பங்கேற்கும் முக்கிய போட்டிகள் இன்று...

ஆண்கள் அரை இறுதியில் இந்தியா-பாகிஸ்தான், பகல் 1 மணி.
Asian Games
Published on: 

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் இன்று (இந்திய நேரப்படி) பங்கேற்கும் முக்கிய போட்டிகள் வருமாறு:-

வில்வித்தை:

காம்பவுண்ட பெண்கள் தனிநபர் கால் இறுதியில் சிகிதா தனிபார்த்தி (இந்தியா)-நூரிசா டியான் அஷ்ரிபா (இந்தோனேசியா), அதிகாலை 5.30 மணி, காம்பவுண்ட் ஆண்கள் தனிநபர் கால்இறுதி யில் கணேஷ் மணிரத்னம் திருமுரு (இந்தியா)-சி லுன் சென் (சீன தைபே), காலை 9.47 மணி.

கிரிக்கெட்:

ஆண்கள் அரைஇறுதியில் இந்தியா-இலங்கை, காலை 10.30 மணி.

ஹாக்கி:

ஆண்கள் அரை இறுதியில் இந்தியா-பாகிஸ்தான், பகல் 1 மணி.

கைப்பந்து:

ஆண்கள் கால்இறுதியில் இந்தியா-பாகிஸ்தான், காலை 6.30 மணி.

ஜூடோ:

பெண்கள் 57 கிலோ தொடக்க சுற்று, யாமினி மவுரியா, காலை 7.30 மணி, பெண்கள் 70 கிலோ தொடக்க சுற்று, இனுகன்பி தேகலம்பம், காலை 7.30 மணி.

துப்பாக்கி சுடுதல்:

ஆண்கள் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் தனிநபர் தகுதி சுற்று, அனிஷ் பன்வாலா, காலை 6.10 மணி.

ஸ்குவாஷ்:

பெண்கள் அணிகள் அரைஇறுதியில் இந்தியா- ஹாங்காங், காலை 7 மணி, ஆண்கள் அணி கள் அரைஇறுதியில் இந்தியா-மலேசியா, பகல் 1 மணி.

டென்னிஸ்:

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் சுமித் நாகல் (இந்தியா)-வு யிபிங் (சீனா), காலை 8.30 மணி.

மல்யுத்தம்:

ஆண்கள் 77 கிலோ தொடக்க சுற்று, அமன், காலை 7.22 மணி, பெண்கள் 62 கிலோவில் மான்சி, காலை 7.30 மணி, ஆண்கள் 60 கிலோவில் சுமித், காலை 7.55 மணி, ஆண்கள் 97 கிலோவில் நிதேஷ். காலை 8.19 மணி.

X

Maalai Malar
www.maalaimalar.com