

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 3-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் டெரன்ஸ் ஆட்மனே உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய அலெக்சாண்டர் ஸ்வரேவ் 7-6 (7-4), 7-6 (8-6) என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடார் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் சிலியின் அலெஜாண்ட்ரோவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெற உள்ள 4-வது சுற்றில் ரபேல் ஜோடார், இத்தாலியின் பிளாவியோ கோபாலி உடனும், அலெக்சாண்டர் ஸ்வரேவ் அமெரிக்காவின் டாமி பால் உடனும் மோதுகின்றனர்.