அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஸ்வரேவ், முசெட்டி முதல் சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
zverev, musetti
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வரேவ், லாரன்சோ முசெட்டி ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இன்று நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், இத்தாலியின் லாரன்சோ சொனேகா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4, 3-6, 6-7 (7-9), 7-5, 6-4 என்ற செட் கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, பிரிட்டனின் ஆர்தர் பெரி உடன் மோதினார். இதில் அதிரடியாக ஆடிய

முசெட்டி 6-3, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com