சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
zverev
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட டாமி பால் அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (8-6), 6-4 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் ரபேல் ஜோடாரை 6-4, 6-7 (3-7), 3-6 என்ற செட் கணக்கில் வீழ்த்திய இத்தாலியின் பிளாவியோ கோபாலி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நள்ளிரவு நடைபெற உள்ள காலிறுதி சுற்றில் இத்தாலியின் பிளாவியோ கோபாலி, அமெரிக்காவின் டாமி பால் உடன் மோத உள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com