அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ், கச்சனாவ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
zverev
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ரஷியாவின் கரண் கச்சனாவ் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்று போட்டிகள் இன்று நடந்தன.

இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் பொடிக் வான் டே உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் ரஷியாவின் கரண் கச்சனாவ் 6-2, 7-5 என இரு செட்களை வென்றார். 3வது செட்டில் 3-2 என முன்னிலை பெற்றிருந்தபோது பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் பிளாக்ஸ் காயத்தால் விலகினார். இதனால் கரண் கச்சனாவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அரையிறுதி சுற்றில் ஸ்வரேவ், கரண் கச்சனாவ் உடனும், அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்சிஸ் தியாபே உடனும் மோதுகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com