

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 6-4, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போகினா முதல் செட்டில் 4-1 என முன்னிலை பெற்றிருந்தபோது பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஜியா காயத்தால் விலகினார். இதையடுத்து ஸ்பெயின் வீரர் அலெஜாண்ட்ரோ அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோவை சந்திக்க உள்ளார்.