ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ஸ்வரேவ்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெறுகிறது.
Zverev
Published on: 
Summary

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்ளிக் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் முதல் செட்டை 7-6 (8-6) என போராடி வென்றார். இதற்கு பதிலடியாக பப்ளிக் 6-4 என 2வது செட்டைக் கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 7-6 (7-1) என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ஜியா, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com