

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான 4வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நம்பர் 3 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் குயின்டென் ஹேலிஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வரேவ் 7-6,(7-4), 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.