

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.
இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் ஆர்தர் பில்ஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 6-4, 7-6 (8-6) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நேற்று நடந்த லீக் போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 7-6 (10-8), 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ரபேல் ஜோடாரை வீழ்த்தினார்.
ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.