

சீனா ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் ஸ்வரேவ், செர்பியாவின் ஜோகோவிச் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரிட்டிஷின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 7-6 (7-1), 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் போர்ச்சுகல் வீரர் நியூனோ போர்கசை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.