ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் ஸ்வரேவ், பென் ஷெல்டன் வெற்றி

இத்தாலியில் உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
zverev
Published on: 
Summary

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ஜெர்மனியின் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள டூரின் நகரில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் ரபேல் ஜோடார் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய ஸ்வரேன் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்சின் ஆர்தர் பில்சை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

X