Miami Open Tennis | முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
யூகி பாம்ப்ரி
யூகி பாம்ப்ரி
Published on

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் ஸ்மித்-நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ் ஜோடி உடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் செட்டை 6-4 என வென்றது. ஆனால் அடுத்த இரு செட்களை 5-7, 13-15 என இழந்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் தொடரில் இருந்தும் வெளியேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com