

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு யூகி பாம்ப்ரி ஜோடி முன்னேறியுள்ளது.
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுது சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - அமெரிக்காவின் ரியான் செகர்மேன் ஜோடி, அமெரிக்காவின் ஜேக்சன் வித்ரோ-நாதானியல் லேமான்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய அமெரிக்க ஜோடி முதல் செட்டை 6-3 என வென்றது.
இதில் சுதாரித்துக் கொண்ட யூகி பாம்ப்ரி ஜோடி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 7-6 (7-5), 10-6 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.