மொராக்கோ ஓபன்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது

மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
மொராக்கோ ஓபன்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது
Published on

ரபாட்:

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரபேல் மேட்டீஸ், கொலம்பியாவின் நிகோலஸ் ஜோடியுடன் மோதியது.

இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-5) என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டை 6-7 (1-7) என இழந்தது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com