சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
venus williams
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், கொலம்பியாவின் எமிலியானோ அராங்கோ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய கொலம்பியா வீராங்கனை 6-2, 6-2 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

நாளை நடைபெறவுள்ள 2வது சுற்றில் கொலம்பியா வீராங்கனை, போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோதுகிறார்.

வீனஸ் வில்லியம்ஸ் சிட்டி ஓபன் டென்னிஸ், இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் உள்ளிட்ட டென்னிஸ் தொடர்களிலும் முதல் சுற்றோடு வெளியேறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com