டென்னிஸ் போட்டிகளில் பிரசித்தி பெற்றது கிராண்ட்சிலாம் போட்டியாகும். ஒவ்வொரு ஆண்டும் 4 கிராண்ட்சிலாம் போட்டிகள் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள் டன் ஆகிய போட்டிகள் முடிந்து இருந்தன.
இதில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அல்காரசும் (ஸ்பெயின்), பிரெஞ்சு ஓபன் பட்டத்தை அலெக் சாண்டர் சுவரேவ் (ஜெர் மனி), விம்பிள்டன் பட் டத்தை சின்னரும் (இத்தாலி) கைப்பற்றி இருந்தனர்.
பெண்கள் பிரிவில் எலினா ரைபகினா (கஜகஸ் தான்-ஆஸ்திரேலிய ஓபன்), மிரா ஆந்த்ரேவா (ரஷியா-பிரெஞ்சு ஓபன்), லிண்டா நோஸ்கோவா (செக் குடியரசு- விம்பிள்டன்) ஆகியோர் வெற்றி பெற்று இருந்தனர்.
ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை தொடங்குகிறது. செப்டம்பர் 13-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.
நடப்பு சாம்பியனான அல்காரஸ் மீண்டும் பட்டம் வெல்வாரா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது. காயம் காரணமாக அவர் கடந்த சில மாதங்களாக விளையாட வில்லை. இந்த போட்டி தொடரில் அவர் 2-வது வரிசையில் இருக்கிறார்.
முதல்நிலை வீரராக சுவரேவ் இருக்கிறார். 24 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனை யாளரான ஜோேகாவிச் (செர்பியா) நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டம் வென்று சாதிப்பாரா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக அவர் 2023-ல் அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றினார். அதன் பிறகு அவர் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றது இல்லை.
பெண்கள் பிரிவில் கடந்த ஆண்டு சபலென்கா (பெலாரஸ்) சாம்பியன் பட்டம் பெற்றார்.
இந்த முறை பெண்கள் பிரிவில் பட்டம் பெற கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.