

7-ம் நிலை வீரரான மெத்வதேவ் 6(1)-7(7), 4-6, 6(6)-7(8) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நேற்றிரவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் 8-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பி. செல்டன் கிரீஸ் நாட்டின் டிசிட்சிபாஸை எதிர்கொண்டார்.
இதில் ஷெல்டன் 6-2, 6-3, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் 7-ம் நிலை வீரரான மெத்வதேவ், அமெரிக்காவின் 11-ம் நிலை வீரரான தியபோ-வை எதிர்கொண்டார்.
இதில் தியஃபோ நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றாலும், மெத்வதேவ் கடும் சவால் விடுத்தார். முதல் செட் "டை" பிரேக்கர் வரை சென்றது. இந்த செட்டை தியஃபோ 7(7)-6(1) எனக் கைப்பற்றினார். 2-வது செட்டை "டை" பிரேக்கர் வரை செல்ல விடாமல் 6-4 எனக் கைப்பற்றினார். ஆனால், 3-வது செட்டும் "டை" பிரேக்கர் வரை சென்றது. இதையும் 7(8)-6(6) என தியஃபோ கைப்பற்றினார். இதன்மூலம் 3-0 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கெல்சன் 7(8)-6(6), 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார். நாளை நடைபெறும் காலிறுதியில் தியஃபோ- மைக்கெல்சன் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
காலிறுதிக்கு முந்தைய போட்டிகளில் நம்பர் ஒன் வீரலர் ஸ்வெரேவ், இத்தாலியின் டார்டெரியை நாளை எதிர்கொள்கிறார். மற்றொரு காலிறுதியில் ஷெல்டன்- அல்காரஸ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.