அமெரிக்க ஓபன் டென்னிஸ்: தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் தொடங்க உள்ளது.
sumit nagal
Published on

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்து வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 30-ம் தேதி நியூயார்க்கில் தொடங்குகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகின்றனர். தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

தகுதிச்சுற்றுக்கான போட்டி ஒன்றில் இந்தியாவின் சுமித் நாகல், பிரான்சின் ஆர்தர் கீ உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் வீரர் 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்றார்.

இதன்மூலம் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், நம்பர் ஒன் வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா வுடன் கைகோர்த்தார்.

நேற்று நடந்த முதல் சுற்றில் கேத்தரினா சினியகோவா (செக் குடியரசு)- ஹென்றி பேட்டன் (இங்கிலாந்து) ஜோடியுடன் மோதினர். இதில் ஜோகோவிச் இணை 4-1, 2-4 (2-10) என்ற செட் கணக்கில் தோற்று வெளியேறியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com