

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் நேரடியாக தகுதி பெற்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கிரீசின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோ செரண்டலோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிரான்சிஸ்கோ 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் 2வது சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறினார்.