

மாட்ரிட்:
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் கிரேக்க வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பிரேசிலின் தியாகோ மான்டீரோவை எதிர்கொண்டார்.
இதில் சிட்சிபாஸ் 4-6, 4-6 என்ற நேர் செட் கணக்கில் தியாகோவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அத்துடன் தொடரில் இருந்து வெளியேறினார்.