

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், பெல்ஜியத்தின் கிம்மர் கோப்பஜென்ஸ் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள 2வது சுற்றில் சிட்சிபாஸ், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதவுள்ளார்.