

அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோவாசெவிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சிட்சிபாஸ் முதல் செட்டை 7-6 (11-9) என வென்றார். இதற்கு பதிலடியாக அமெரிக்க வீராங்கனை 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சிட்சிபாஸ் 6-3 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.