மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ், டிமித்ரோவ் வெற்றி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் சிட்சிபாஸ், டிமித்ரோவ் வெற்றி
Published on

மாட்ரிட்:

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 2வது சுற்றுக்கு நேரடியாக தகுதிபெற்றார்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது சுற்றில் சிட்சிபாஸ், ஜெர்மன் வீரர் ஜேன் லென்னார்டு உடன் மோதினார்.

இதில் முதல் செட்டை3-6 என இழந்த சிட்சிபாஸ், அடுத்த இரு செட்களை 6-4, 6-3 என வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் பல்கேரியாவின் டிமித்ரோவ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் சிலி வீரர் நிகோலஸ் ஜேரியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com