

ஸ்வீடனில் நடந்த ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்தது.
இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவின் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-2 என முதல் செட்டில் வென்றார்.
இதற்கு பதிலடியாக அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டின் 2வது செட்டை 6-4 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை டெய்லர் பிரிட்ஸ் 7-6 (7-3) என வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.