ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் டெய்லர் பிரிட்ஸ்

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
taylor fritz
Published on: 
Summary

ஸ்வீடனில் நடந்து வரும் ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச்சுற்றுக்கு அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் முன்னேறினார்.

ஸ்டாக்ஹோம் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையா் பிரிவின் அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய டெய்லர் பிரிட்ஸ் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் அர்ஜெண்டினாவின் தியாகோ அகஸ்டின் 7-5, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் சிலியின் அலெஜாண்ட்ரோ டபிலோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் டெய்லர் பிரிட்சும், தியாகோ அகஸ்டினும் மோதவுள்ளனர்.

X