விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.இரண்டாவது அரையிறுதி சுற்றில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
Published on

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்

உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வென்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவாவை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com