

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரான்சின் டயானே பாரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறவுள்ள காலிறுதி சுற்றில் கோகோ காப், உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக் உடனும், இகா ஸ்வியாடெக் கஜகஸ்தானின் ரிபாகினா உடனும் மோதுகின்றனர்.