பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் டென்னிஸ்: எம்மா ராடுகானு விலகல்

கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.
பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் டென்னிஸ்: எம்மா ராடுகானு விலகல்
Published on

இங்கிலாந்தை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை எம்மா ராடுகானு. 2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றவரான அவர், இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கை மற்றும் கணுக்காலில் ஏற்பட்ட காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

சமீபத்தில் நடந்த மாட்ரிட் ஓபனில் இருந்து கையில் காயத்துடன் வெளியேறி இருந்தார். காயம் காரணமாக அவர் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும் போது, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளை தவறவிடுவேன் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது.

என்னை ஆதரித்த என்று ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com