ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுமித் நாகல் தோல்வி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் சுமித் நாகல் தோல்வி
Published on

சிட்னி:

டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.

அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.

இதில் தாமஸ் மச்சாக் 6-3, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com