

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு பிரிட்டனின் சோனே கர்தால் முன்னேறினார்.
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பிரிட்டனின் சோனே கர்தால், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சோனே கர்தால் 7-6 (11-9), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இது இவரது சிறப்பான இறுதிப்போட்டி ஆகும்.
பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனான ஜெலினா ஆஸ்டோபென்கோ, தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினா, ஒலிம்பிக் முன்னாள் சாம்பியனான பெலிண்டா பென்கிக், விம்பிள்டனின் முன்னாள் இறுதிப்போட்டியாளரான ஜாஸ்மின் பவுலினி உள்ளிட்டோரை நடப்பு தொடரில் தோற்கடித்துள்ளார்.
சோனே கர்தால் டென்னிஸ் தரவரிசையில் 170-வது இடத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.