வூஹான் ஓபன் இறுதி போட்டியில் தோல்வி: ஒரே தொடரில் 121 இடம் முன்னேறிய பிரிட்டன் வீராங்கனை

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்தது.
sonay kartal
Published on: 
Summary

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால், பிரிட்டனின் சோனே கர்தால் 121 இடங்கள் முன்னேறி டாப் 50 பட்டியலில் நுழைந்தார்.

வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்தது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் பிரிட்டனின் சோனே கர்தால், போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய மஜா சாவ்லின்ஸ்கா 2-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

தரவரிசையில் 49வது இடம்

இந்நிலையில், பெண்கள் டென்னிஸ் தரவரிசையில் பிரிட்டன் வீராங்கனை சோனே கர்தால் 121 இடம் முன்னேறி டாப் 50 பட்டியலில் நுழைந்துள்ளார். அவர் 49வது இடம் பிடித்துள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் முன்னாள் சாம்பியனான ஜெலினா ஆஸ்டோபென்கோ, தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள எலினா ஸ்விடோலினா, ஒலிம்பிக் முன்னாள் சாம்பியனான பெலிண்டா பென்கிக், விம்பிள்டனின் முன்னாள் இறுதிப்போட்டியாளரான ஜாஸ்மின் பவுலினி உள்ளிட்டோரை நடப்பு தொடரில் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com