சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் காயத்தால் விலகிய அமெரிக்க வீராங்கனை

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.இதன் அரையிறுதியில் அமெரிக்காவின் அனிசிமோவா காயத்தால் விலகினார்.
சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் காயத்தால் விலகிய அமெரிக்க வீராங்கனை
Published on

வாஷிங்டன்:

சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதிச் சுற்றில் அமெரிக்காவின் சோபியா கெனின், சக நாட்டு வீராங்கனை அமண்டா அனிசிமோவா உடன் மோதினார்.

இதில் சோபியா கெனின் 5-2 என முதல் செட்டில் முன்னிலை பெற்றிருந்தார். அப்போது அனிசிமோவா காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.

இதையடுத்து சோபியா கெனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சோபியா கெனின், ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com