சின்சினாட்டி ஓபன்: ஸ்வரேவ், சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி ஓபன்: ஸ்வரேவ், சின்னர் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தற்போது காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி சுற்றில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார்.

இதில் ஸ்வரேவ் 3-6, 7-6 (7-3), 7-5 என்ற செட் கணக்கில் வென்று அரையிதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷிய வீரர் ரூப்லெவ் உடன் மோதினார். இதில் சின்னர் 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இன்று நள்ளிரவு நடைபெறும் அரையிறுதியில் நம்பர் 1 வீரரான ஜானிக் சின்னர், ஸ்வரேவை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com