வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வரேவ்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது. ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார்.
வியன்னா ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் சின்னர், ஸ்வரேவ்
Published on

வியன்னா:

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் ஆஸ்திரியாவில் நடந்து வருகிறது.

ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக விளையாடிய சின்னர் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சின்னர், ஸ்வரேவை எதிர்கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com