ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.இறுதிப்போட்டியில் இத்தாலியின் சின்னர் வெற்றி பெற்றார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
Published on

துரின்:

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றது.

இத்தாலியின் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com