ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் அரையிறுதியில் சின்னர், அலெக்ஸ் டி மினார் மோதல்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடைபெறுகிறது. முதல் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலிய வீரரை எதிர்கொள்கிறார்.
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: முதல் அரையிறுதியில் சின்னர், அலெக்ஸ் டி மினார் மோதல்
Published on

துரின்:

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஆண்டின் இறுதியில் நடத்தப்படுகிறது.

அதன்படி, 56-வது ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.

ஜிம்மி கனோர்ஸ் பிரிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்டிஸ் டி மினார் இடம்பெற்றனர்.

லீக் சுற்று முடிவில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் ஆகியோர் முதல் இரு இடங்களைப் பெற்றனர்.

இந்நிலையில், இன்று நடைபெற உள்ள முதல் அரையிறுதியில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com