Monte Carlo masters | 2வது சுற்றில் சின்னர், அல்காரஸ் வெற்றி

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.
சின்னர், அல்காரஸ்
சின்னர், அல்காரஸ்
Published on

மான்டேகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரின் 2வது சுற்றுக்கு முன்னணி வீரர்கள் நேரடியாக தகுதி பெற்றனர்.

இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், பிரான்சின் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் அல்காரஸ் 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பயசை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com