டென்னிஸ் தரவரிசை: டாப் 5 பட்டியலில் இடம்பிடித்த பென் ஷெல்டன்

ஆண்கள் ஒற்றையரில் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதலிடத்தை தக்கவைத்தார்.
ben shelton
Published on
Summary

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் நம்பர் 1 இடத்தில் நீடிக்கிறார்.

சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் தரவரிசையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார்.

மூன்றாவது இடத்தில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உள்ளார்.

5 இடம் முன்னேறிய பென் ஷெல்டன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அமெரிக்காவின் பென் ஷெல்டன் 5 இடங்கள் முன்னேறி நான்காவது இடம் பிடித்துள்ளார்.

கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமி ஒரு இடம் சரிந்து ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் இடம்பிடித்துள்ளனர்.

4 இடம் முன்னேறிய தியாபே

ரஷியாவின் டேனில் மெத்வதேவ் இரு இடம் முன்னேறி 6-வது இடத்திலும், இத்தாலியின் பிளேவியோ கோபாலி 7-வது இடத்திலும், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபே 4 இடம் முன்னேறி 8-வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் இரு இடம் சரிந்து 9-வது இடமும், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 10-வது இடத்திலும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com