

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கு இத்தாலியின் சாரா எர்ரானி-ஜாஸ்மின் பவுலினி ஜோடி முன்னேறியது.
உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது.
இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சபலென்காவை வீழ்த்தி உக்ரைனின் எலினா ஸ்விடோலினா அரையிறுதிக்கு முன்னேறினார்.
முதல் அரையிறுதியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடனும், 2வது அரையிறுதியில் செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடனும் மோதுகின்றனர்.
இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த 3வது லீக் போட்டியிலும் இத்தாலியின் சாரா எர்ரானி-ஜாஸ்மின் பவுலினி ஜோடி வெற்றி பெற்றது.
இதன்மூலம் இத்தாலி ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஏற்கனவே நடந்த இரு லீக் போட்டிகளிலும் இத்தாலி ஜோடி வெற்றி பெற்றிருந்தது.