விம்பிள்டன் - கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி அரையிறுதியில் தோல்வி

விம்பிள்டன் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.அரையிறுதியில் முதல் செட்டை கைப்பற்றிய சானியா ஜோடி அடுத்த இரு செட்டை இழந்து தோல்வி அடைந்தது.
சானியா மிர்சா
சானியா மிர்சா
Published on

லண்டன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி, டெசிரே கிராசிக் - நீல் குப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

இதில் சானியா மிர்சா - மேட் பாவிக் ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com