Miami Open Tennis | சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்து வருகிறது.
சபலென்கா
சபலென்கா
Published on: 

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது.

பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிச்சுற்று போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா முதல் செட்டை 6-2 என வென்றார். இதற்கு பதிலடியாக கோகோ காப் 2வது செட்டை 6-4 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை சபலென்கா 6-3 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com