அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ரிபாகினாவை பழி தீர்ப்பாரா சபலென்கா?

அரினா சபலென்கா தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
sabalenka, rybakina
Published on
Summary

இன்று நள்ளிரவு நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் பெலாரசின் சபலென்கா, கஜகஸ்தானின் ரிபாகினா ஆகியோர் மோதுகின்றனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

எலினா ரிபாகினா

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, அமெரிக்காவின் கோகோ காப் உடன் மோதினார்.

முதல் செட்டில் 3-6 என தோல்வி அடைந்த ரிபாகினா, அதன்பின் கம்பேக் கொடுத்து 6-4, 6-4 என்ற செட் கணக்கில் கோகோ காப்பை சாய்த்து, அமெரிக்க ஓபனில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அரினா சபலென்கா

மற்றொரு அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை சந்தித்தார். இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற நேர்செட்டில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி, தொடர்ந்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இறுதிப்போட்டி

இந்நிலையில், இன்று நள்ளிரவு நடைபெறும் பெண்கள் ஒற்றையர் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் எலினா ரிபாகினாவும், அரினா சபலென்காவும் மோத உள்ளனர்.

இருவரும் கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 3-வது முறை ஆகும்.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிச்சுற்றில் ரிபாகினா, சபலென்காவைச் சாய்த்து சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அதற்கு பழிதீர்க்கும் வகையில் சபலென்கா வரிந்து கட்டுவார் என்பதால் இந்தப் போட்டியில் பரபரப்புக்கு குறைவிருக்காது.

X

Maalai Malar
www.maalaimalar.com