அமெரிக்க ஓபன் டென்னிஸ்: சபலென்கா, ஸ்வியாடெக் முதல் சுற்றில் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது.
sabalenka, swiatek
Published on
Summary

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, கொலம்பியாவின் கேமிலா ஒசோரியோ உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடந்த முதல் சுற்று போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையான வாங் ஜியுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com