

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அங்குள்ள டொரண்டோ நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது 3வது சுற்று ஆட்டம் நடந்து வருகிறது.
நேற்று நடந்த 3வது சுற்று போட்டியில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் விக்டோரிஜா கொலுபிக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-2, 6-1 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்த அரினா சபலென்கா, சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, அமெண்டா அனிசிமோவா மற்றும் மேடிசன் கீஸ், உக்ரைனின் மர்டா கோஸ்ட்யூக், எலினா ஸ்விடோலினா உள்ளிட்டோரும் 4வது சுற்றுக்கு முன்னேறினர்.
நாளை நடைபெற உள்ள இரண்டாவது சுற்றில் அரினா சபலென்கா, சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதுகிறார்.