

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
நேற்று நடந்த போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா, செக் குடியரசின் லிண்டா நோஸ்கோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 7-6 (7-1), 3-6, 7-6 (10-7) என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடந்த மற்றொரு காலிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 3-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான எம்மா நவாரோவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதியில் சபலென்கா, ஜெசிகா பெகுலா ஆகியோர் மோதுகின்றனர்.