Italy Open டென்னிஸ்: 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது.
Italy Open டென்னிஸ்: 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி
Published on

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையும், பெலராசின் அரினா சபலென்கா, ரொமானியாவின் சொரானா சிர்ஸ்டி உடன் மோதினார்.

இதில் சிறப்பாக ஆடிய சொரானா சிர்ஸ்டி 2-6, 6-3, 7-5 என வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com