டென்னிஸ் தரவரிசை: நம்பர் 2 இடத்தில் இருந்து சரிந்த சபலென்கா

முன்னணி வீராங்கனையான சபலென்கா 2வது இடத்தில் இருந்து ஒரு இடம் சரிந்தார்.
sabalenka
Published on: 
Summary

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா நம்பர் 2 இடத்துக்கு முன்னேறினார்.

உலகின் டாப்-8 முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யூ.டி.ஏ. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் நடந்தது.

இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

ரிபாகினா நம்பர் 1

இந்நிலையில், பெண்கள் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது. இதில் நம்பர் 1 இடத்தை கஜகஸ்தானின் எலினா ரிபாகினா தக்கவைத்துள்ளார்.

சரிந்த சபலென்கா

நம்பர் 2 இடத்தில் இருந்த பெலாரசின் சபலென்கா ஒரு இடம் சரிந்து 3வது இடம் பிடித்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் இருந்த ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா ஒரு இடம் முன்னேறி 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் சபலென்கா நம்பர் 1 இடத்தையும் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X