சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
sabalenka
Published on

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இத்தொடர் வரும் 23-ம் தேதி வரை நடைபெறுகிறது. தற்போது 4-வது சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, செக் குடியரசின் சாரா பெஜ்லக் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சாரா பெஜ்லக் 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நம்பர் 1 வீராங்கனையான சபலென்கா 4வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

கடந்த மாதம் நடந்த விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இம்மாதத்தின் தொடக்கத்தில் நடந்த கனடா ஓபன் டென்னிஸ் தொடரிலும் அரினா சபலென்கா 4வது சுற்றில் தோல்வி அடைந்தார்.

நடப்பு ஆண்டில் பிரிஸ்பேன் ஓபன், இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர்களில் மட்டுமே சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை நடைபெறவுள்ள காலிறுதி சுற்றில் செக் குடியரசின் சாரா பெஜ்லக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் உடன் மோதுகிறார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com