Wimbledon Tennis: 3வது சுற்றுக்கு முன்னேறினர் சபலென்கா, முசோவா

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
sabalenka, muchova
Published on

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 2வது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இதில் இன்று நடந்த போட்டியில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான அரினா சபலென்கா, அமெரிக்காவின் மெக்கார்ட்னி கெஸ்லர் உடன் மோதினார்.

இதில் அதிரடியாக ஆடிய சபலென்கா 6-1, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் நம்பர் 10 வீராங்கனையும், செக் குடியரசைச் சேர்ந்தவருமான கரோலினா முசோவா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஷுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் மூன்றாவது சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com